புதுக்கோட்டை, ஜன.4- கட்டுமானப் பொருட் களின் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரி களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். ஆன்லைன் குளறுபடிகளை கலைந்திட வேண்டும். ஆன்லைன் அப ராதத்தை ரத்துசெய்ய வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், தொழி லாளர் நலவாரிய உறுப்பி னர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார் பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில செயலா ளர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரை யாற்றினர்.
கரூர்
கரூர் நலவாரிய அலுவல கம் முன்பு கரூர் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக்குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப.சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தம், மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், கட்டு மான சங்க மாவட்ட செயலா ளர் சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் கண்டன உரை யாற்றினர். டாஸ்மாக் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, தையல் சங்க கௌரவ தலைவர் ஆர்.ஹோச்சுமின், செயலாளர் செந்தில்முரு கன், டிஎன்பிஎல் காண்ட் ராக்ட் தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் என்.ரெங்கராஜ், எலக்ட்ரிகல் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாற்றுத்திறனாளி சங்க மாவட்டச் செயலாளர் கண் ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.