புதுக்கோட்டை, ஏப்.19- மேல்நிலைத்தொட்டி இயக்குநர் கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்த ரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று புதுக்கோட் டையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க (சிஐடியு) தலைவர் கே.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் சி.அன்புமண வாளன், எஸ்.யாசிந்த், துணைச் செய லாளர்கள் சி.மாரிக்கண்ணு, ரெத்தின வேல் ஆகியோர் விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மேல்நிலைத் தொட்டி இயக்குநர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்க ளுக்கு பணிநிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு 31 விழுக்காடு அகவிலைப்படியை இணை த்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்களு க்கு மகளிர் குழு மூலம் சம்பளம் வழங்கு வதைத் தவிர்த்து ஊராட்சி நிர்வாகம் மூலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப் பட்டன.