புதுக்கோட்டை, ஏப்.17 - புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக் கோட்டையை அடுத்த கல்லுக்காரன்பட்டி யில் வகிக்கும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதனக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி, மாவட்டக்குழு உறுப்பினர் சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தர வைக் காரணம் காட்டி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப் புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அவர்களுக்கு உரிய வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். கல்லுக்காரன்பட்டியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். பகுதிநேர ரேசன் கடை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.