districts

கணக்கெடுப்பு நடத்தி வீடு இல்லாத மக்களுக்கு பட்டா வழங்குக! - சிபிஎம் வேண்டுகோள்

அரியலூர், மே 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு கூட்டம் அரிய லூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் தலை மையில் நடைபெற்றது. மாநிலக்  குழு உறுப்பினர் எஸ்.வாலண் டினா, கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எம்.இளங் கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மகாராஜன், வி. பரமசிவம், எம்.வெங்கடாசலம், எ.கந்தசாமி, கே.கிருஷ்ணன், துரை.அருணன், டி.அம்பிகா மற்றும் மாவட்ட குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரால் அரிய லூர் மாவட்டத்தில் கங்கவடங்க நல்லூர், அரியலூரில் ஆயிரங் கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள வீடுகள் இடித்து அப்புற படுத்தப்பட்டுள்ளன. ஜெயங் கொண்டம் குருவாலப்பர் கோயில்  ஊராட்சிக்கு உட்பட்ட கொக் கரணை, கரைமேடு, அய்யப்ப நாயக்கன்பேட்டை ஊராட்சி தர்ம சமுத்திரம், ஆண்டிமடம் ஒன்றியத் திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலை  ஆக்கிரமிப்புகள் என்ற  பெயரால் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட பகுதி களில் இடித்த வீடுகளுக்கு மறு  குடியமர்த்த இடமும், இடித்து  அப்புறப்படுத்தப்பட்ட வீடு களுக்கு உரிய நஷ்ட ஈடும், குடி யிருப்பு இடத்திற்கு குடிமனைப் பட்டாவும் வழங்க வேண்டுமென கோரி, கடந்த மே 6 அன்று தமிழ கம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் இலவச வீட்டுமனை  பட்டா கேட்டு ஜெயங்கொண்டம் கீழத்தெரு, குண்டவெளி சொக்க லிங்கபுரம், இடைக்கட்டு, இளைய பெருமாள் நல்லூர், முதுசேர்வ மடம், அய்யப்பநாயகன் பேட்டை ஊராட்சி தர்மசமுத்திரம் போன்ற இடங்களிலும், ஆண்டிமடம் வட்டத் தில் சிலுவைச்சேரி, ஓலையூர், அழகாபுரம், கொடுக்கூர், செந்துறை  வட்டத்தில் ஆலத்தியூர், உடை யான்குடிகாடு, சிறுகடம்பூர், ஆனந்தவாடி, கச்சேரி, இலங்கை சேரி அருந்ததியர் மக்களுக்கும், தா.பழூர் ஒன்றியத்தில் அணை குடம், விக்ரமங்கலம், கோடாலி கருப்பூர், உதயநத்தம், திருமா னூர் ஒன்றியத்தில் வாண்ட்ராயன் கட்டளை, குருவாடி, கரைவெட்டி போன்ற இடங்களிலும், அரிய லூரில் திடீர்குப்பம், ஓட்டக்கோ யில் மற்றும் நகராட்சி பகுதியில் வாழும் மக்களுக்கு இலவச வீட்டு  மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே கொடுத்த மனுக்களின் மீது இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிடவும், நீர்நிலை மற்றும் கோயில் மடங்கள்-மசூதிகளுக்கு சொந்தமான இடங்களில், குடி யிருக்க கூடிய ஏழை, எளிய மக்க ளுக்கு போர்க்கால அடிப்படை யில் குடிமனைப் பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகத்தில் கடந்த மே 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாநிலம் தழுவிய போராட்டத்தின் எதிரொலியாக, தமிழக முதலமைச்சர், “இனி  தமிழகத்தில் வீடுகள் இடிக்கப்பட  மாட்டாது; மாற்று இடம் அனை வருக்கும் வழங்கி மறுகுடியமர்த்தப் பட்டு, பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம்” என்ற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது.  

அதே நேரத்தில் அரியலூர் மாவட்டம் முழுவதும் வீடுகள்  இல்லாத மக்களுக்கு கணக் கெடுப்பு நடத்தி, அவரவர் குடி யிருக்கும் இடங்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரை இந்தக் கூட்டத் தின் வாயிலாக கேட்டுக் கொள் கிறோம். அரியலூர் மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டிகளுக்கு குவாரி அமைக்க கோரி பலமுறை போராட்டம் நடத்தப்பட்டு அதி காரிகள் பேச்சுவார்த்தையும் நடத்தி,  இதுவரை குவாரி தொடங்கப்பட வில்லை.  தமிழகத்தில் தஞ்சை மாவட் டம் உட்பட பல இடங்களில் மாட்டு வண்டி குவாரிகள் இயங்கி வரு கின்றன. அரியலூர் மாவட்டத்தை  தமிழக அரசு வஞ்சிக்கிறது. எனவே மாட்டுவண்டி தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக திருமா னூர், தா.பழூர் உள்ளிட்ட பகுதி களிலும், செந்துறை வெள்ளாற்று  பகுதிகளிலும் போர்க்கால அடிப்ப டையில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியரை கேட்டுக்  கொள்கிறோம் என தீர்மானிக்கப் பட்டது.