புதுக்கோட்டை/பொன்னமராவதி, ஜூன் 6 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி செய்த செயலாளர், நகை மதிப்பீட்டா ளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். இந்த முறைகேட்டிற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் காரை யூர் அருகே உள்ள நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில் நல்லூர், வாழைக்குறிச்சி, நெறிஞ்சிக் குடி, கூடலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை அடகு வைத்து நகைக் கடன்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த 4 சவரன் நகையை திருப்ப சென்ற போது, அந்த நகை கூட்டுறவு கடன் சங்கத்தில் இல்லாததால், அங்கு பணி புரியும் ஊழியர்கள் அதற்கு பதிலாக மாற்று நகையை வாங்கி கொடுத்திருந்த னர். இந்த நகையை பெற்றுக்கொண்ட கிருஷ்ணன் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில் அடகு வைத்த மற்ற நபர்களின் நகைகளும் காணாமல் போயிருக்கலாம் என்று எண்ணி, “நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில் நகைகளை அடகு வைத்தவர்கள் தங்களது நகை உள்ளதா என்று பரிசோ தித்து கொள்ளுமாறு” சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 31 ஆம் தேதி மற்றும் ஜூன் 1 ஆம் தேதி களில் நகைகளை அடகு வைத்த அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள், வங்கி முன்பு நகைகள் சரியாக உள்ளதா என கேள்வி எழுப்பி முற்றுகையிட்டனர். இதற்கு முன்பாகவே சமூக வலை தளத்தில் வந்த பதிவை வைத்து அதி காரிகள் ஆய்வைத் தொடங்கிய போது, இரவு நேரத்தில் நகைகளை ஆய்வு செய்யக் கூடாது என்று கூறினர். பொது மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி னர். இதனையடுத்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கடந்த மே 31 ஆம் தேதி யிலிருந்து இரண்டு நாட்கள் பகலில் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் நகைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது அந்த கூட்டுறவு கடன் சங்கத் தில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரி யும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சாமிநா தன் என்பவர் தனது சொந்த தேவைக் காக வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 159.800 கிராம் தங்க நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்தது தெரிய வந்தது. இதற்கு அந்தக் கூட்டுறவு கடன் சங்கத் தின் செயலாளராக உள்ள சங்கிலி யும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அறந்தாங்கி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் முரு கேசன் கொடுத்த புகாரின் அடிப்படை யில் காரையூர் காவல்துறையினர் நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன், செயலாளர் சங்கிலி உள்ளிட்ட இருவர் மீது 2 பிரிவு களில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நகைகளை கையா டல் செய்து தனியார் வங்கியில் அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் சாமிநாத னையும், உடந்தையாக இருந்த செய லாளர் சங்கிலி உள்ளிட்ட இருவரை யும் பணியிடை நீக்கம் செய்து கூட்டு றவு சங்க மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாகவும் நகை மதிப்பீட் டாளர் தனியார் வங்கியில் அடகு வைத்த அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ள தாகவும் மண்டல இணைப் பதிவாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சிபிஎம் வலியுறுத்தல்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றி யச் செயலாளர் என்.பக்ருதீன் தெரி விக்கையில், மேற்படி சங்கத்தில் விசா ரணை அதிகாரி ஏற்கனவே இந்த சங்கத் தின் ஆய்வு அலுவலராக இருந்த காலத் தில் இம்முறைகேடு நடந்துள்ளது. எனவே விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும். முறைகேடுகள் தொடர்பான நகை பாக்கெட்டுகள் மற்றும் ஆவ ணங்களை கையகப்படுத்த வேண்டும். பெயருக்கு விசாரணை நடத்தி முறை கேட்டு ஆவணங்களை சரிசெய்யும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.