புதுக்கோட்டை, டிச.12- புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி களை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணை யர் மரு.தாரேஸ் அஹமது, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் ஆய்வு செய்தார். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளைப் ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீதான நட வடிக்கைகள் குறித்துஅலுவலர்களிடம் கேட்டறிந்தார். மிக வும் பின்தங்கிய பகுதியாக உள்ள எல்.என்.புரம் ஊராட்சிக்குட்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தை ஆய்வு செய்து, அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின், துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தில், ஊராட்சிமன்றத் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி மற்றும் கோட்டாட்சி யர்கள் பங்கேற்றனர்.