புதுக்கோட்டை, மார்ச் 30- சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 87 ஆயிரம் போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து எதுவும் குறிப்பிடாததைக் கண்டித்தும், பேருந்துகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைளை அமுல்படுத்தாததைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் போக்குவரத்துப் பணி மனைகள் முன்பாகவும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) புதுக்கோட்டை மண்டல பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றி னார். கந்தர்வகோட்டையில் கே.சபாபதி தலைமையில் மத்திய சங்கத் தலைவர் கே.கார்த்திக்கேயன், அறந்தாங்கியில் பி.லோகநாதன் தலைமையில் மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் செந்தில்நாதன், ஆலங்குடியில் ஆர்.சுந்தர் தலைமையில் மத்திய சங்க துணைச் செய லாளர் என்.மெய்யராம், பொன்னம ராவதியில் கண்ணன் தலைமையில் மத்திய சங்க துணைச் செயலாளர் பாலகுமார், திருச்சியில் கே.முருகன் தலைமையில் மத்திய சங்க துணைச் செயலாளர் எஸ்.செந்தில்குமார், பட்டுக்கோட்டையில் ராஜசேகரன் தலைமையில் மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சாமியய்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.