புதுக்கோட்டை, செப்.13 - கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்த ஏழை யின் வீட்டை இடிப்பதற்கு முயன்ற அதிகாரிகளின் நடவடிக்கையை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தடுத்து நிறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, ஆலய நிலமெடுப்பு தாசில் தார் சந்திரசேகரன் உள்ளிட்ட அதி காரிகள் சம்பவ இடத்திற்கு திங்கள் கிழமை வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விளம்பரத் தட்டி வைத்தனர். அப்போது, மேற்படி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டு களாக குடியிருந்து வரும் ஏழைக் குடும் பங்களைச் சேர்ந்த இரண்டு பேரின் வீடுகளையும் அதிகாரிகள் பொக்லை னைக் கொண்டு வந்து இடிக்க முயன்ற னர். தகவலறிந்து விரைந்து வந்த கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, அதிகாரிகள் வீட்டை இடிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மேற்படி வீடுகளை இடிக்கும் முயற் சியை தடுத்து நிறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரையின் மேற்படி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர். மேற்படி வீடுகளுக்கு வகை மாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பின ருடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தி னவேல், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றியக் கவுன்சிலர் ராஜேந்திரன், துணை வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.