districts

நெடுஞ்சாலை துறை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகம், வீடு, தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை

புதுக்கோட்டை, அக்.13-  அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சா லைத் துறையில் பல கோடி ரூபாய்க்கு ஒப்  பந்தம் எடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்ட புதுக்கோட்டை யைச் சேர்ந்த நெடுஞ்சாலை துறை அரசு  ஒப்பந்ததாரர்  அலுவலகம், வீடு, தொழிற் சாலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதி காரிகள் வியாழனன்று இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டிதுரை. இவர் நெடுஞ்சாலைத் துறை  அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவ ரது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் பணி செய்த நிலையில், அவர்  உயிரிழந்ததை தொடர்ந்து வாரிசின் அடிப்படையில் பாண்டித்துரை நெடுஞ்  சாலை துறையில் இளநிலை உதவியா ளராக தனது பணியை தொடர்ந்துள்ளார். பின்னர் புதுக்கோட்டையில் நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்று பணி புரிந்து வந்தார். அப்போது முதற்கட்டமாக அவரது நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்  சாலையில் சாலையோரம் உள்ள மரங்க ளுக்கு வர்ணம் பூசும் பணியை எடுத்து கொடுத்து வந்துள்ளார்.  பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் நெருக்கம் ஏற்பட்டு பல்வேறு அரசு ஒப் பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியை விடுத்து நெடுஞ்சாலைத் துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி செய்ய தொடங்கினார். பின்னர் ஓ.பன்னீர்  செல்வம் நெடுஞ்சாலை துறை அமைச்ச ராக இருந்த காலகட்டத்திலும், பின்னர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலும் நெடுஞ்சாலை துறையில் சாலையில் பதிக்  கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து  செய்து வந்துள்ளார்.

மேலும் தற்பொழுதும் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஒப்பந்தத்தை எடுத்து செய்து வரு கிறார். குறிப்பாக யுஎஸ் தரச்சான்றில் பொருட்  களை பயன்படுத்துவோம் என்று ஒப்பந்  தம் எடுத்துவிட்டு தரமற்ற பொருட்களை உப யோகித்து அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டி மிகப்பெரிய சொத்துக்களை இவர்  குவித்ததாக கூறப்படுகின்றது. இதனை யடுத்து இவர் தற்பொழுது கோயம்புத்தூ ரில் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.  இந்நிலையில், புதுக்கோட்டை பெரி யார் நகரில் உள்ள ஹரிவே லயன்ஸ் என்ற பெயரில் இயங்கும் அவரது அலுவலகம் அதே பகுதியில் உள்ள அவரது வீடு, அவ ரது மேலாளர் பீட்டரின் வீடு திருவேங்கை வாசல் அருகே சிப்காட்டில் உள்ள இரண்டு  தொழிற்சாலை உள்ளிட்ட ஐந்து இடங்க ளில் 50க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள்  புதன்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தி வந்த நிலையில், வியாழனன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரு மானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து பல இடங்களில் குறிப்பாக கோயம்புத்தூர் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இவர் தோட்டம், வீடு உள்ளிட்டவற்றை வாங்கி உள்ள நிலையில் தற்போது வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரண்டாவது நாளாக நடை பெறும் இந்த சோதனையில் கிடைக்கப் பெறும் ஆவணங்களை பொறுத்து அவர் தொடர்புடைய மற்ற சில இடங்களுக்கும் வருமானவரித் துறையினர் சோதனையை விரிவுபடுத்தப்படலாம் என தகவல்களும் வெளியாகி உள்ளது.