districts

அறந்தாங்கி பகுதியில் கால்வாய்,  வாய்க்கால்களை தூர்வாருக!  விவசாயிகள் கோரிக்கை

அறந்தாங்கி, மே 22- மே 24-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கபடுவதால், அறந்தாங்கி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதியில் கல்லணை கால்வாய் காவிரி நீரை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. விவசாய பணிகளுக்காக மே 24-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கபடுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் பெரிய வாய்க்கால், கிளை வாய்க்கால் உள்பட காவிரி நீர் பாயும் பகுதிகளில் வாய்க்கால்கள் வெட்டப்படவில்லை. எனவே, நவீன இயந்திரங்களை கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீர்செல்லும் வாய்க்கால்களில் செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.