districts

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் அறந்தாங்கியிலேயே தொடர வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.20 - அறந்தாங்கி மாவட்ட தொடக்கக்  கல்வி அலுவலகம் அறந்தாங்கியி லேயே தொடர வேண்டுமென தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி  வலியுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டச் செயலா ளர் த.ஜீவன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு இயக்கங் களின் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தொடக்கக் கல்வித் துறைக்கு  என்று தனி இயக்ககம் உருவாக்கப் பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலை யில், கடந்த ஆட்சியாளர்களால் பிறப்பிக் கப்பட்ட 101 மற்றும் 108 அரசாணை களின் விளைவாக தொடக்கக் கல்வித் துறை  பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப்பட்டு தொடக்கக் கல்வித்  துறையின் அதிகாரங்கள் பறிக்கப் பட்டு பெயரளவில் செயல்பட்டு வந்தது.  இதன் விளைவாக பல்வேறு குளறுபடி கள் ஏற்பட்டது மட்டுமின்றி தொடக்கக் கல்வித் துறையின் தனித்துவம் முற்றிலு மாக சிதைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி யதன் பயனாக, தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை 151- ன்படி தொடக்கக்கல்வித் துறை தனித்து  இயங்குவதற்கான வழிவகை செய்யப் பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத் தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி  ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங் கள் செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வர வேற்கிறது. தொடக்கக் கல்வித் துறையில் 90  விழுக்காடு பெண் ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இச்சூழலில் நகரின் மையப் பகுதியில் போக்கு வரத்து வசதியுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைந்த இடமான  முதன்மைக் கல்வி அலுவலக வளா கத்திலேயே மாவட்ட தொடக்கக் கல்வி  அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆலங்குடி நகரில் அமைக்க உள்ளதாக கூறப்படு கிறது. அறந்தாங்கியில் அமைக்க  வேண்டிய மாவட்டத் தொடக்கக் கல்வி  அலுவலகத்தை மாற்றுவது ஏற்புடைய தல்ல. இந்த அலுவலகம் அறந்தாங்கியி லேயே தொடர வேண்டுமெனவும் வலி யுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.