அறந்தாங்கி, மார்ச்.3- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அடுத்த ஒத்தக்கடையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கினார். அறந்தாங்கி தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் கருவிடச்சேரி ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், புதிய நமது இல்லம் அறக்கட்டளை நிர்வாகி சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத் தலை வர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந் தாங்கி நகர்மன்ற உறுப்பினர் துளசி ராமன், நற்பவளகுடி ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழியன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.