districts

அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் உலகத் திரைப்பட விழா: தமுஎகச முடிவு

புதுக்கோட்டை, ஜூலை 24 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் 2022 அக்டோபர் மாதம் உலகத் திரைப்பட விழா புதுக் கோட்டையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். வேலை அறிக் கையை செயலாளர் எம்.ஸ்டாலின் சர வணன், வரவு-செலவு அறிக்கையை பொரு ளாளர் கி.ஜெயபாலன் ஆகியோர் முன் வைத்தனர்.  மாநில செயற்குழு உறுப்பினர் நா.முத்துநிலவன், மாநிலக்குழு உறுப்பினர் ஜீவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரும் அக் டோபர் மாதம் உலகத் திரைப்பட விழாவை  புதுக்கோட்டையில் நடத்துவது, அடுத்தடுத்த  மாதங்களில் கவிதை, சிறுகதை, நாவல், ஓவி யம், வீதி நாடகங்கள் குறித்து வாசிப்பு  மற்றும் பயிற்சி முகாம்களை நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.  கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், இரா.தனிக்கொடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர் கள் பங்கேற்றனர்.