districts

நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆர்டிஓ அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி

அறந்தாங்கி, மார்ச் 24 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனிநபர் ஒருவர் தன்னுடைய இடத்தை ஆக்கி ரமிப்பு செய்து உள்ளதாக, அறந்தாங்கி ஒன்றி யத்துக்குட்பட்ட ஊர்வணி ஊராட்சியில் உள்ள பள்ளத்திவயல் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் பலமுறை அதி காரிகளிடம் முறையிட்டுள்ளார். இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத  அதிகாரிகளை கண்டித்து ஆர்டிஓ அலுவல கத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த மதன் குமார், அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றபோது, சிஐடி புலனாய்வு பிரிவைச் சேர்ந்த திலகர், அவரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தார். இதுகுறித்து மதன்குமாரிடம் கேட்ட போது, தனக்கு சொந்தமான இடம் 1974 இல்  அரசால் வழங்கப்பட்ட இடம். அந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக கிளை  செயலாளருமான லட்சுமணன் அபகரித்துள் ளார். பின்பு 2017 ஆம் ஆண்டு அந்த இடத்தில்  செட் அமைக்கும் போது, எங்களது இடத்தில்  செட் அமைப்பது குறித்து அவரிடம் கேட்ட தற்கு, ‘இந்த இடம் என்னுடையது’ என்றார். இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களாக அதி காரிகளிடம் பலமுறை மனுக்களை கொடுத்து  வந்துள்ள நிலையில், எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்துள் ளேன் என்றார். அதன்பிறகு, அதிமுக கிளை  செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக காவல்துறையினர் சமாதானம் செய்து மதன்குமாரை அனுப்பி வைத்தனர்.