பொன்னமராவதி, பிப்.24- பொன்னமராவதியில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி மற்றும் கண்காட்சி நடை பெற்றது. பொன்னமராவதி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி மற்றும் கண் காட்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பொன்னமராவதியில் வியாழனன்று நடைபெற்றது. இதில், குறுவள மைய தலைமையா சிரியை ஆர்த்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) பழ.நல்லநாகு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அல்போன்சா ஆகி யோர் தொடங்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்றுநர் முகமது ஆசாத், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வைரவன்பட்டி ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் தன்னார் வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.