புதுச்சேரி, ஜூலை.27- புதுச்சேரியில் அனைத்து ரேசன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினர். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். சிவப்பு மஞ்சள் நிற அட்டைகளுக்கு வழங்க வேண்டிய விலையில்லா அரிசியை உடனடியாக வழங்க வேண்டும். அரிசி வழங்காத காலத்தில் அரிசிக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 2ஆம் தேதி தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமும் காத்திருப்பு போராட்டமும் நடைபெற உள்ளது.
சந்திப்பு
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்க சாமியை புதனன்று (ஜூலை 27) சந்தித்த னர். அப்போது கோரிக்கை மனு அளித்த னர். மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.