districts

பாலியல் துன்புறுத்தலை தடுக்க வேண்டும்: புதுவை கல்வி துறைக்கு கோரிக்கை

புதுச்சேரி, செப்.1- பெண் ஊழியர்கள்,  மாணவிகளுக்கு எதிரான  பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புதுச்சேரி கல்வித்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி கல்வித்துறை செயலாள ருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் முனி யம்மாள், செயலாளர் இளவரசி ஆகி யோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:- புதுச்சேரியில் பெண்கள், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடந்த வண்ணம் உள்ளது. இது போன்ற கொடுமை களுக்கு ஆளாக நேரிடும் பெண்களைப் பாதுகாப்பதும்  , நியாயம் பெற்று தரு வதும், குற்றவாளிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதும் அரசு மற்றும் உயர் அதிகாரிகளின்  கடமையாகும்.  கடந்த 10 தினங்களுக்கு முன்பு உழ வர்கரை நகராட்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் கடை நிலை ஊழியராக பணி செய்த பெண் ஊழி யரிடம் அப்பள்ளியில்  பணியாற்றிய ஆசிரி யர் ஒருவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் களை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.  ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்க தவறியது மட்டுமல்ல, குற்றத்திற் கான ஆதாரங்களை அழிக்க வேண்டும் என்று அந்தப் பெண்ணை நிர்பந்தப்  படுத்தியதாக கூறப்படுகிறது. இது போன்ற புகார்களை சம்பந்தப்பட்ட புகார் கமிட்டிகளுக்கு தெரிவிக்காமல் அதிகாரி களே கட்டப்பஞ்சாயத்து செய்வது, குற்ற வாளிகளுக்கு ஆதரவாக ஆதாரங்களை அழிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

ஆகவே, இது சம்பந்தமாக தாங்கள் விசாரணை செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் பெண்களோ, அல்லது மாணவி களோ தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடு மைகள் குறித்து தைரியமாக புகார் தெரி விக்க விசாரணை அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.  அதுபோன்ற அமைப்புகள் கல்வித் துறையில் அமைக்கப்பட்டுள் ளதா? என்பது தெரியவில்லை. அப்படி அமைக்கப் பட்டிருந்தால் அதன் செயல்பாடு பற்றி பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதும் தங்களின் கடமையாகும். ஆகவே, பெண்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள புகார் கமிட்டிகள் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் விளம்பர பலகைகளை ஆங்காங்கே அமைக்க வேண்டும். விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை உடனே செய்ய வேண்டும். தவரும் பட்சத்தில் அனைத்து பெண்களையும் திரட்டி கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.