districts

img

புதுச்சேரியில் ஜவுளிப்பூங்கா அமைத்திடுக சிஐடியு பிரதேச மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரி,செப்.18- சுதேசி,பாரதி,ஏஎப்டி பஞ்சாலைகளை இணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று சிஐடியு பிரதேச மாநாடு புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. சிஐடியு புதுச்சேரி பிரதேச 12வது மாநாடு லெனின் வீதியில் தோழர் கே.வைத்தியநாதன் நினை வரங்கத்தில் சனிக்கிழமை துவங்கி 2 நாட்கள் நடை பெற்றது. மாநாட்டிற்கு பிரதேச தலைவர் கே.முரு கன் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை பிரதேச துணைத்தலைவர் ஜே.குணசேகரன் ஏற்றி வைத்தார். சிஐடியு தமிழ் மாநில துணைத்தலைவர் பி.கருப்பையன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.முன்னாள் செயலாளர் வெ. பெருமாள், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் பிரதேச செயலாளர் டி.தமிழ்ச்செல்வன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். பிரதேச செயலாளர் சீனு வாசன் வேலை அறிக்கை யையும் பொருளாளர் பிரபு ராஜ் வரவுசெலவு அறிக்கை யையும் சமர்பித்தனர். சிஐடியு தமிழ்மாநில துணைத்தலைவர் பொன்முடி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். நிர்வாகிகள் ராமசாமி,கலியன்,கொளஞ்சியப்பன்,கலியமூர்த்தி, ரவிச்சந்திரன், ராஜ்குமார், பச்சமுத்து, மது, மணிபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
புதுச்சேரி மாநிலத்தின் பாரம்பரியமிக்க சுதேசி,பாரதி,ரோடியர் பஞ்சாலைகளை திறந்து நவீனப்படுத்திட வேண்டும். ஒன்றிய அரசிடம் இருந்து ரூ.500கோடி பெற்று காரைக்கால், மற்றும் திருபு வனையில் உள்ள நூற்பாலைகளை உள்ள டக்கிய ஜவுளிபூங்காக்களை அமைத்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். மின்துறை தனியார்மயத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். அமைப்பு சார தொழிலாளர்களின் நல வாரியத்திற்கு ரூ.10கோடி நிதி ஒதுக்க வேண்டும். வாகன உரிமங்களை புது பிக்கவும், மற்றும் போக்கு வரத்து துறையின் அனைத்து கட்டண உயர்வுகளையும் திரும்ப பெற்று, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பழைய கட்டணங்களையே வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
26பேர் கொண்ட புதுச்சேரி பிர தேசக்குழு விற்கு சிஐடியு தலை வராக என்.பிரபுராஜ், செய லாளராக ஜி.சீனுவாசன், பொருளாளராக ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.