மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழா, புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.