புதுச்சேரி, ஜன. 17- பிரஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என அழைக்கப்படும் புதுவையில் பல்வேறு கலைநயம் மிக்க கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களை பாதுகாக்கவும், பராமரிக்க வும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்ட மாக பாரம்பரிய கட்டிடங்கள் எவை? என அடையாளம் காணப்பட்டு அவை பட்டியலி டப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசு கட்டிடங்கள் 36, பிரெஞ்சு அரசு கட்டிடங்கள் 9, அரவிந்தர் ஆசிரம கட்டி டங்கள் 60, தேவாலயங்கள் 9 என மொத்தம் 114 கட்டிடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் தர கட்டிடங்களில் ஆயி மண்டபம், பழைய துறைமுகம், கோபுரம், ஆளுநர் மாளிகை, டூப்ளக்ஸ் சிலை, பிரெஞ்சு தூதரகம், அரவிந்தர் ஆசிரமம், துமாஸ் தேவாலயம், குபேர் மார்க்கெட் கடிகார கோபுரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதுவை நகர அமைப்பு குழுமம் இந்த பட்டியலை வெளியிட்டு இதில் பொது மக்களுக்கு ஆட்சேபனைகள், பரிந்துரைகள் இருந்தால் தெரிவிக்கும்படி கோரிய பின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இனி இந்த கட்டிடங்களை இடிப்பதற்கு அனு மதியில்லை. சிறிய சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். இதன் மூலம் அகமதாபாத், தில்லி,ஜெய்ப்பூர் நகரங் களைப் போல பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள் ளது. இதன் அடுத்த கட்டமாக 2ஆவது கட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலை புதுவை நகர அமைப்பு குழுமம் தயாரித்து வரு கிறது. அரசின் ஒப்புதல் பெற்றவுடன் அந்த பட்டியல் வெளியிடப்பட உள்ளது.