புதுச்சேரி,ஜன.5- புதுச்சேரி பேட்டையன் சத்தி ரத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை(ஜன.5) நடைபெற்றது. அங்கீகரிக்கப் பட்டுள்ள தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் வல்லவன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளி யிட்டார். புதுச்சேரி பிராந்தியத்தில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 27 ஆண், 4 லட்சத்து 7 ஆயிரத்து 430 பெண், 122 மூன்றாம் பாலினம் என மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரத்து 579 வாக்காளர்கள் உள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் 75 ஆயிரத்து 308 ஆண், 87 ஆயிரத்து 142 பெண், 22 மூன்றாம் பலினம் என ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 472 வாக்காளர்களும், மாகேவில் 13 ஆயிரத்து 157 ஆண், 16 ஆயிரத்து 493 பெண் என 30 ஆயிரத்து 650 வாக்காளர்களும், ஏனாமில் 18 ஆயிரத்து 790 ஆண், 20 ஆயிரத்து 104 பெண் என 38 ஆயிரத்து 894 வாக்காளர்களும் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 4 லட்சத்து 71 ஆயிரத்து 282 ஆண், 5 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண், 144 மூன்றாம் பாலினம் என மொத்தம் 10 லட்சத்து 2 ஆயிரத்து 595 வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் வாக்காளர் பட்டி யல் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த ஆண்டு டிசம்பர் வரை நடை பெற்றது. வாக்காளர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்பே னைகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு இறுதி வாக்காளர் பட்டி யல் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளதில் ஆண்களை விட பெண் வாக்கா ளர்களே அதிகம் உள்ளனர்.