பெரம்பலூர், டிச.20 - பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதி யில், பயிற்சி மேற்கொண்ட சிறுமிகளிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்ட விளையாட்டு பயிற்சியாளரை கைது செய்ய கோரி திங்கட்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநில துணை செய லாளர் கீதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் சின்னபொண்ணு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்க வளா கத்தில் இயங்கி வரும் மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி பெற்று வந்த சிறுமிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விளை யாட்டு பயிற்றுநர் தர்மராஜ் மீதான குற்றச்சாட்டின் மீது மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் விரைந்து நட வடிக்கை எடுக்கவில்லை. பயிற்றுநர் தர்மராஜ், மற்றும் அலுவலர் சுரேஷ் ஆகியோரை கைது செய்யக் கோரி மாதர் சங்கத்தினர் முழக்கமிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.