பெரம்பலூர், ஜூன் 19 - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயன் பெறும் வகையில், ஜூன் 25 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகா மினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற கூட்டத் திற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் மற்றும் தொழிலா ளர் மற்றும் திறன் மேம்பாட் டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம் பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிரியா, அரிய லூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ம.பிர பாகரன் (பெரம்பலூர்), கு. சின்னப்பா (அரியலூர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங் கொண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் கூறியதாவது: “தமிழ்நாடு முதல மைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட் டில், இதுவரை 61 இடங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 87,994 பேருக்கு தனியார் துறையில் வேலை பெற்றுத் தந்துள்ளோம். மூன்று மாதங் களுக்கு முன்பு செங்கல்பட்டு கிரசண்ட் கல்லூரியில் நடை பெற்ற வேலை வாய்ப்பு முகா மில் 1,00,000 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் களை நடத்தி வருகிறோம். எனவே 25.6.2022 பெரம் பலூர் - அரியலூர் மாவட்ட படித்த இளைஞர்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், செங்கல்பட்டு மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவ னங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் முக்கிய நிறு வனங்களான எம்ஆர்எப் நிறு வனம் பெரம்பலூர், கோட்டக் மகிந்திரா குழுமம், JBM Auto Ltd Innovace Group, Hindustan Group of Com pany உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளன. பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நாங்கள் தயா ராக உள்ளோம்”. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.