பெரம்பலூர், ஏப். 9- பெரம்பலூர் மாவட்டத்தில் தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் தொடர் மார்க்சிய பயிற்சி வகுப்பு 2 ஆண்டு களாக தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வகுப்பில் “இந்தியப் பொருளாதாரம் எதிர் நோக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் பொருளாதார ஆய்வாளர் வெங்கடடேஷ் ஆத்ரேயா பேசினர். அவர் தமது உரையில், “கடந்த எட்டு ஆண்டுகால ஒன்றிய அரசின் ஆட்சி அமிர்தகாலம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக் கும், பெரும் முதலாளிகளுக்கும் தான் அமிர்தாகலம்” ஏழை-எளிய மக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. அமிர்தகாலம் யாருக்கு என்ற கேள்வியை சமூக அக் கறையுள்ளவர்கள் எழுப்ப வேண்டும். 2014-ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கூறிய ஒன்றிய அரசு கருப்பு பணத்தை ஒழிக் கவே இந்த நடவடிக்கை எனக் கூறி யது. கருப்புப் பணம் ஒழிந்ததோ இல்லையோ மோடி அரசின் நடவடிக் கையால் சிறு- குறு- முறைசாராத் தொழி லாளர்களை கடுமையாக பாதிக்கப்பட் டனர். ரூபாய் நோட்டு ஒழிப்பில் பெரும் பகுதி மக்கள் பிரச்சனைகளைத் தான் சந்தித்தனர். ஜிஎஸ்டி வரியின் மூலம் சாதாரண மக்கள் மீது மறைமுகமாகத் தாக்குலை தொடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி, தனியார் மயம். தாராள மயத்தால் மாநிலங்களின் அதிகாரங் களை ஒன்றிய அரசு பறித்து வருகிறது. 2023-2024-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் எந்த நலத் திட்டங்களும் இல்லை என்றார். பயிற்சி வகுப்பில் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ், ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி, மருத்துவர் ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.கலையரசி, ஏ.கே.ராஜேந்திரன், ஆர்.கோகுலகிருஷ்ணன், நகர் செய லாளர் சிவானந்தம் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.