பெரம்பலூர், ஏப்.3- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட் டம் ஏப்ரல் 3 அன்று ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நகராட்சி தூய்மைப்பணி ஒப்பந்த தொழிலாளர்கள் சிஐடியு சார் பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். மனுவில், ‘‘பெரம்பலூர் நகராட்சியில் தூய்மைப் பணி மற்றும் இதர பணிகளில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறோம். தங்க ளது ஊதியத்திலிருந்து பிடித் தம் செய்யப்பட்ட இபிஎப் தொகை கணக்கில் முறை யாக செலுத்தப்படவில்லை. சில பணியாளர்களுக்கு மட் டும் ஒரு குறிப்பிட்ட இபிஎப் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போல பாதுகாப்பு சாதனங் கள், சீருடை, அடையாள அட்டையும் வழங்கப்படா மல் நீண்ட காலமாக முறை கேடு நடைபெற்று வருகிறது. எனவே இந்த முறையா வது மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.