பெரம்பலூர், ஜூன் 12 - ஊரக வளர்ச்சி முகமை யின் மூலம் செயல்படுத்தப் படும் தமிழ்நாடு ஊரக சாலை கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட காரை, கொளக்காநத்தம், நத்தக் காடு, சீராநத்தம், அயினா புரம், ஜமீன்ஆத்தூர் மற்றும் அனைப்பாடி உள்ளிட்ட பகுதி களில் ரூ.2.76 கோடி மதிப்பி லான சாலை பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமை வகித்தார். தொடர்ந்து கொளக்கா நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் மேசை, நாற்காலி உள்ளிட்ட தளவாட பொருட்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் அனைப்பாடி ஆதிதிராவிடர் தெருவில் ஏழை, எளிய மக்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள ஏதுவாக ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் சமு தாயக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கொளக்காநத்தம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ள புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண் ணிக்கை அதிகரித்து இருக் கிறது. அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி யில் படிக்கிறபோது மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற சிறப்புத் திட்டத்தால், அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பள்ளி மாணவ, மாணவி களுக்கு இலவச பேருந்து பயண அட்டையினை ஸ்மார்ட் கார்டாக வழங்கு வதற்கான டெண்டர் விடப் பட்டு, அதற்கான நடவ டிக்கை துவங்கியிருக்கிறது. எனவே ஸ்மார்ட் கார்டு வழங் கப்படும் வரை ஏற்கனவே பயன்படுத்திய இலவச பேருந்து பயண அட்டை களையே பயன்படுத்தி மாணவ, மாணவிகள் பயணிக் கலாம்” என்றார்.