பெரம்பலூர், ஏப்.21 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் ஏப்.20 அன்று பெரம்பலூர் துறைமங்கலத்தி லுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் எ.கலையரசி தலைமை வகித்தார். மாநில பொது செய லாளர் சுகந்தி, மாநில துணைச் செயலா ளர் கீதா ஆகியோர் சிறப்புரையாற்றி னர். பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை குடும்பத்திற்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு கொண்டு வர வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பயனா ளிகளுக்கு கூலி வழங்க ஒதுக்கப்பட்ட நிதியினை, உணவு தானியக் கிடங்கு கட்டுவதற்காக தமிழக அரசு அறிவித் துள்ளது. அதனை கைவிட்டு, பயனாளி களுக்கு கூலியாக வழங்க வேண்டும். 2019-20 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்பநல ஆய்வின்படி குடும்ப வன்முறை நிகழ்வதில் இந்திய அள வில் தமிழ்நாடு 2 ஆவது மாநிலமாக உள்ளது, 44.7 சதவீதம் பேர் பாலியல் வன்முறை ரீதியாக பாதிக்கப்படுவதும், மேலும் பாதிக்கப்பட்ட 81 சதவீதம் பேர் எந்த உதவிகளையும் நாடுவதில்லை. இதற்கு பிரதான காரணமாக உள்ள மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டு, படிப்படியாக மது விற்பனையை கைவிட அரசு முன் வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு, பாலின சமத்துவ கல்வி கொடுக்கப்பட வேண்டும். காவல்துறை, நீதித்துறை, அரசு அதிகாரி களுக்கு பாலியல் சமத்துவ விழிப்பு ணர்வு கருத்துகளை வழங்கிட அரசு முன்வர வேண்டும். வீட்டு வேலைக்கான உழைப்பை மதிப்பீடு செய்து அதற்கான உதவித்தொகை வழங்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.