பெரம்பலூர், செப்.7 - சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத சாலைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.5,200, 20,200 தர ஊதியம் ரூ.1900 வழங்க உத்தர விட வேண்டும். சாலைப் பணியாளர்களில் இறந்தோர்களின் வாரிசுகள், கருணை அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் வருகின்றனர். தொடர்ச்சியாக பெரம்பலூர் துறைமங்க லத்திலுள்ள கோட்டப் பொறியாளர் அலுவ லகம் முன்பு புதன்கிழமை வெண்ணிற கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் ப.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.சுப்ரமணியன் துவக்க உரையாற்றினார். கோட்ட செயலாளர் சி.சுப்ரமணியன் விளக்க உரையாற்றினார். மாநில துணை தலைவர் எஸ்.மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரை ஆற்றினார். கோட்ட பொருளா ளர் கே.கருணாநிதி நன்றி கூறினார்.