பழனி, மார்ச் 22- திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையி லான இந்தியா கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதா னந்தம் அறிமுக செயல் வீரர்கள் கூட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி யில் நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வீரமணி, காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், சிபிஎம் முன்னாள் பழனி நகர் மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன், மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், விசிக மேற்கு மாவட்டச் செயலாளர் திருவளவன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பழனி ராஜா, தமிழ் புலிகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் தர்மராஜ், மமக மேற்கு மாவட்டச் செயலாளர் கே.பக்ருதீன், எம்ஜிஆர் கழகம் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், பார்வார்டு பிளாக் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.ஜெயராமன், மநீம என்.சிவா ஹாசன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டத் தலைவர் ஐ.அருள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலை வர்கள் பங்கேற்றனர். சிபிஎம் நகரச் செயலாளரும், பழனி நகர் மன்ற துணைத் தலைவருமான கே.கந்த சாமி நன்றி கூறினார்.
தேர்தல் நிதி வழங்கல்
திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஆர். சச்சிதானந்தத்திற்கு தேர்தல் வைப்புத் தொகை செலுத்துவ தற்காக பழனி, பழைய ஆயக்குடி 5-வது வார்டு கட்சி கிளை சார்பில் ரூ.25 ஆயிரம் தேர்தல் நிதி வழங் கப்பட்டது.