பழனி, ஏப்.5- ‘ரெட்டலையை’ வாடகைக்கு எடுத்து தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனி சாமி முதல்வர் ஸ்டாலின் பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது என்று அமைச்சர் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம், கடந்த இரண்டு நாட்களாக பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய கிராமப்பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் அர.சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.
பழனி மானூரில் வியாழனன்று அமைச்சர் அர.சக்கர பாணி பேசுகையில், “நாடாளுமன்றத் தில் மோடி கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்திற்கு அதிமுகவினர், பாமகவினர் என 11 பேர் வாக்களித்ததால் தான் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காது. ஆனால், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் நிற்கும் வேட் பாளர் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர். தற்போது குடி யுரிமைச் சட்டத்திற்கு வாக்களித்த அதி முகவுடன் சேர்ந்து வாக்கு சேகரிக்கி றார்.
இது என்ன அரசியல்? அந்த சட்டத் திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் கட்சிகள் எதிர்த்து வாக்களித் தார்கள். ஆனால் அதிமுகவும், பாஜக வும் கள்ள உறவு வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி கபட நாடகம் ஆடு கிறார்கள். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பழனி மக்கள் குடிநீர் தாகத்தை போக்க புதிய திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கி யிருக்கிறார். கடந்த ஓராண்டாக அந்த பணி நடந்து வருகிறது. அந்த திட்டம் செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்படும்.
30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச் சனை வராது. தொப்பம்பட்டியில் விளை யாட்டு மைதானம் அமைக்கப்பட் டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் கொண்டு வந்துள் ளோம். மானூரில் பாலம் கட்ட ரூ.9 கோடியே 75 லட்சம் ஒதுக்கியிருக்கி றோம். மானூர் ஊராட்சியில் ரூ.12 கோடி வரை நலத்திட்டங்கள் நிறை வேற்றி உள்ளோம். சச்சிதானந்தம் நமது மண்ணின் மைந்தர். அவருக்கு அரிவாள் சுத்தி யல் நட்சத்திரத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
பிரச்சாரத்தில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் செரீப், திருப்பூர் மாவட்டத் தலைவர் தென்னரசு, முன்னாள் எம்எல்ஏ காளிமுத்து, முன்னாள் காங்கி ரஸ் தலைவர் சிவசக்திவேல், திண்டுக் கல் மாநகர காங்கிரஸ் தலைவர் மணி கண்டன், மச்சக்காளை, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கமலக்கண்ணன், எம்.ராமசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.கனகு மற்றும் திமுக, விடுதலைச்சிறுத்தை கள், மதிமுக, இஸ்லாமிய அமைப்புக ளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலை வர்கள் கலந்து கொண்டனர்.