அமெரிக்காவில் தொடரும் அவலம் : வறுமையால் திருடர்களாக மாற்றப்படும் இளைஞர்கள்
வாசிங்டன், ஏப்.22- அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கடை களில் திருடுவது கடைகளில் திருடுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவில் பணவீக்கம், வேலை யின்மை, விலைவாசி உயர்வு, வீடுகள் பற்றாக் குறை, வறுமை, உச்சத்தில் உள்ள வீட்டு வாடகை ஆகிய காரணங்களால் அமெரிக்க மக்கள் பொரு ளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டன் உட்பட பல முக்கிய நகரங்களில் வீடுகள் இல்லாத தால் மக்கள் தெருவோரங்களில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வறுமையைச் சமாளிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியா வசியப் பொருட்களை பெறுவதற்காகவும் சூப்பர் மார்க்கெட் உட்பட பல வணிக கடைகளில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தோற்றுவிட்டன என தற்போது தெரிய வந்துள்ளது. 2023 இல் மட்டும் இத்தகைய சூப்பர் மார்க்கெட் உட்பட சில்லரை வணிகக் கடைகளில் நடத்தப்பட்ட திருட்டுகளின் காரணமாக சுமார் 121 பில்லியன் டாலர்களுக்கும் மேல் வணிகக் கடைகள் இழந்துள்ளன. இந்த அளவு 2026 இல் 150 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 2024 இன் முதல் பாதியில் அந்நாட்டின் பெருநகரங்களில் மட்டும் கடை திருட்டு சம்ப வத்தின் எண்ணிக்கை 24 சதவீதமாக அதிகரித் துள்ளது என்று குற்றவியல் நீதி கவுன்சில் வெளி யிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன. இந்த தரவுகளின் மூலமாக அமெரிக்காவில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவர் கடையில் திருடியுள்ளார்கள். அது மட்டுமின்றி ஒரு ஆண்டில் குறைந்த பட்சம் 20 நுகர்வோரில் ஒருவர் ஏதேனும் ஒரு கடையில் திருட முயற்சித் துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல்களும் தெரிய வந்துள்ளன. குறிப்பாக கடையில் திருடுபவர்கள் ஏமாற்று வதில் கில்லாடிகளாக உள்ளனர் எனவும் திருட்டு களில் ஈடுபடக்கூடிய அத்தகைய நபர்கள் 100 சம்பவங்களில் ஒன்றில் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திருட்டுகளின் காரணமாக சில முக்கிய மான அதிக விலை கொண்ட மாமிசம் உள்ளிட்ட பொருட்களை கடைகளில் பூட்டி வைக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் வாடிக்கை யாளர்கள் கடை விற்பனையாளர் வந்து எடுத்துக் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பல நேரங்களில் அரைமணி நேரம் வரைகூட காத்திருக்க வேண்டிய சூழல் உருவாவ தால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கத் துவங்குகிறார்கள். இது எங்கள் வணிகத்தை மேலும் பாதிப்பில் தள்ளு கின்றது என சிறு வணிக கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.