world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அரேபிய ஏற்றுமதியை பாதிக்கும்  அமெரிக்காவின் வரி

அமெரிக்காவின் வரிகள் அரேபிய நாடுகளின் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியை பாதிக்கின்றது என ஐ.நா அவையின் மேற்கு ஆசியாவிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCWA)  தெரிவித்துள்ளது. வர்த்தக போரால் சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்களின் ஏற்றுமதி ஆபத்தில் உள் ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீ ரகத்தின் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொ ருட்களும் ஜோர்டானில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் அந்நாட்டின் 25 சதவீத வர்த்தகமும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏமன் மீது மீண்டும்  அமெரிக்கா குண்டு வீச்சு 

ஏமன் தலைநகர் சனாவில் மக்கள் கூடி  இருந்த சந்தைப்பகுதியில் அமெரிக்கா குண்டு வீசி வான்வழித் தாக்குதல் நடத்தி யுள்ளது. இந்த தாக்குதலில் படுகொலையான வர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள் ளது. இத்தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந் துள்ளனர் என்று ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கடந்த வியாழன் இரவு மேற்கு யேமனில் உள்ள எரிபொருள் துறைமுகத்தின் மீது அமெ ரிக்கா குண்டு வீசியதில் 80 பேர் படுகொலை யானது குறிப்பிடத்தக்கது. 

ஈஸ்டர் நாளன்றும் தாக்குதல் : ரஷ்யா - உக்ரைன் குற்றச்சாட்டு 

ஈஸ்ட்டர் நாளன்றும் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவும் உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது 387 குண்டு வீசியும், 19 முறை தரைவழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என உக்ரைன் ஜானாதிபதி குற்றம் சாடியுள்ளார். உக்ரைன் ராணுவம்  4,900 முறை ஒப்பந்தத்தை மீறியதாக ரஷ்ய பாதுகாப்புதுறை குற்றம் சாட்டியுள்ளது.  

இந்திய மாணவர்களுக்கு  விசா கட்டுப்பாடு 

சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்ப தற்காக இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை ஆஸ்திரேலியா கிடப்பில் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப், ஹரியானா, உ.பி., உத்தராகண்ட், குஜ ராத், காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து மாணவர் விசா வழங்குவதில் ஆஸ்திரேலியாவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள  எத்தியோப்பியர்களுக்கு உதவி நிறுத்தம் 

நிதிப் பற்றாக்குறை காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 6,50,000 எத்தியோப்பிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவிகளை நிறுத்துவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.  மே மாதம் முதல் உணவு மட்டுமின்றி மருத்துவ உதவிகளும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 2025 க்குள் 20 லட்சம் தாய்கள், குழந்தைகளுக்கு உயிர் காக்கும் ஊட்டச்சத்தை கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போ தைய சூழல் மிக மோசமனது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது