நாமக்கல், நவ. 27- திருக்கோயில்களில் திருப்பணி மேற் கொள்வது குறித்து இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் சு.பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் சு.பிரபாகரன் நாமக்கல் மாவட்டத்தில் வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், சீராப்பள்ளி செவந்தீஸ்வ ரர் திருக்கோயில், சிங்களாந்தபுரம் திரு வேஸ்வரர் திருக்கோயில், அத்தனூர் அத்னூ ரம்மன் திருக்கோயில் ஆகிய திருக் கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது அர்சகர்கள், பக்தர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அலுவலர்களுடன் ஆணையர், சம்மந்தப் பட்ட திருக்கோயில்களின் திருப்பணி குறித்து கலந்துரையாடினார். மேலும், திருப்ணிகளை விரைந்து மேற்கொள்ள தக்க நடவடிக்கையில் ஈடுபட ஆணையர், அற நிலையத்துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். இந்த ஆய்வுகளில் இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் (சேலம்) நா.நட ராஜன், உதவி ஆணையர் கோ.தமிழரசு உட் பட அறநிலையத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.