districts

img

ரூ.70.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார்

நாமக்கல், ஜூன் 16- நாமக்கல் மாவட்டத்தில் பல் வேறு துறைகளின் சார்பில் 113 பய னாளிகளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப் பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன் வியாழனன்று வழங்கி னார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசுத்துறைக ளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட  ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என்.இராஜேஸ்குமார், சேந்த மங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  இதில், சுற்றுலாத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலைஞரின் அனைத்து கிராம  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச் சித்திட்டத்தின் கீழ் வேளாண்மை மற் றும் உழவர் நலத்துறையின் சார்பில்  3 விவசாயிகளுக்கு 7 ஆயிரத்து 630  ரூபாய் மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.3.62  லட்சம் மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 2 விவசாயிகளுக்கு ரூ.3.82 லட்சம் மதிப்பிலும், மக ளிர் திட்டத்துறையின் சார்பில் 20  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களுக்கு ரூ.10 லட்சத்திற்கான கடனு தவி என மொத்தம் 113 பயனாளிக ளுக்கு ரூ.70.69 லட்சம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங் களின் இணை பதிவாளர் த.செல்வ குமரன், வேளாண்மை இணை இயக்குநர் பொ.அசோகன், மகளிர் திட்ட அலுவலர் மா.பிரியா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெவ.தேவிகாராணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் வீ.சக்தி வேலு, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) த.சிவ சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.