districts

மார்ச் 26 நாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவில்,  மார்ச் 22 - கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில்  மார்ச் 26 ஆம்தேதி  காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது. இம்முகாமில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம்  வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு,  ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியி யல் பட்டப்படிப்பு, செவிலியர், கல்வியியல் பட்டப்படிப்பு படித்த வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் அனைவரும் www.tn privatejobs.tn.gov.in என்ற இணையதளத் தில் பதிவு செய்து விட்டு இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9499055932 என்ற அலுவலக அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  வேலைநாடுநர்கள் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.