tamilnadu

img

இந்நாள் மார்ச் 26 இதற்கு முன்னால்

1169 - சிலுவைப் போர்களின்போது, இவரை எதிர்த்துப் போரிடுவதற்கா கவே ‘சலாதின் வரி’ என்பதை இங்கிலாந்து விதிக்குமளவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சலாதின், எகிப்தின் முதலமைச்சராக (விஸியர்) பதவியேற்றார். 1174இல் எகிப்தின் சுல்தானாகி, அயூபிய மரபினைத் தொடங்கிவைத்தார். எகிப்து-சிரியா சுல்தானகத்தை உரு வாக்கிய இவரது ஆட்சியின் கீழ், அவற்றுடன், மேல்-மெசபடோமியா (தற்போ தைய மத்தியக் கிழக்கின் வடக்குப் பகுதி), ஹெஜாஸ் (தற்போதைய சவூதி அரே பியாவின் மேற்கு மாநிலம்), ஏமன், வடஆஃப்ரிக்காவின் சில பகுதிகள் ஆகியவை இருந்தன. மிகப்பெரிய போர் வெற்றிகளாலேயே அறியப்படும் சலாதின், மிகக் குறைந்த உயிரிழப்புகளுடன் அந்த வெற்றிகளைச் சாதித்துக்காட்டியவர். சிலுவைப் போர்களில் வென்ற காலத்தில், ஐரோப்பியப் படைகள் இஸ்லாமி யர்களைக் கொன்றதைப்போல, சலாதின் வென்றபோது கிறித்தவர்களைக் கொல்லவில்லை.

அதனால், கிறித்தவர்களும், யூதர்களும் அவர்மீது மிகப்பெரிய மரியாதை கொண்டிருந்தனர். மூன்றாம் சிலுவைப்போரின்போது, இங்கிலாந்து அரசர் ரிச்சர்டுக்குப் போர்க்களத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, சலாதின், தன் அரண்மனை மருத்துவரை அனுப்பி சிகிச்சையளித்தார். போரில் ரிச்சர்டின் குதிரை பலியானபோது, அவருக்குப் புதிய குதிரைகளை அனுப்பி உதவி செய்தபின்னரே போரைத் தொடர்ந்தார். அதாவது, எதிரியின் பல வீனங்களைப் பயன்படுத்திக்கொள்ள அவர் விரும்பியதேயில்லை. அதனாலேயே, இறுதியாக சலாதினை தோற்கடித்தாலும்கூட, ஜெருசலேமை அவரது கட்டுப் பாட்டிலேயே விடுவதாகவும், கிறித்தவர்கள் பாதுகாப்பாக வந்துசெல்வதை உறுதிப்படுத்துமாறும் ஒப்பந்தம் செய்துகொண்டார் ரிச்சர்ட்! இதற்கு முன்பு, முதல் சிலுவைப் போரில் சலாதினிடம் தோற்றதும், மீண்டும்ஒரு படையெடுப்புக் காக, சலாதின் வரி என்பதை இங்கிலாந்து அரசர் ஹென்றி விதித்தார்.

சொத்தில்  10 சதவீதமான இந்த வரி கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க,செலுத்தாதவர்கள் சிறை யிலடைக்கப்பட்டனர். ஆனால், ஹென்றி இறுதிவரைசலாதினை எதிர்த்துப் போர்தொடுக்கவில்லை என்பது தனிக்கதை! 14 வயதில் ராணுவத்தில் சேர்ந்த சலாதின், பிற சுல்தான்களைப் போலன்றி, மிகச்சிறந்த ராணுவ வீரராகவும் இருந்தார்; அதனாலேயே, வழக்கத்தில் இல்லாத பல போர்முறைகளை அறி முகப்படுத்தி வெற்றிகளைக் குவித்தாலும், போர்க்களத்திலும் எதிரிகளு டன் இணக்கமான உறவையே அவர் கடைப்பிடித்தார். இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைத்த, தீவிர இஸ்லாமியராக இருந்த சலாதின், ஒருபோதும் சமய அடிப் படையிலான பிணக்குகள் ஏற்படாத அளவுக்கு பிற சமயங்களையும் மதித்தார். போர் வெற்றிகளைப் பெற்றாலும், சுமுகமான உறவுகளைப் பேணிய சலாதின், இன்றும் தலைவர்கள் பின்பற்றவேண்டிய ஓர் ஆளுமை என்றால் மிகையல்ல!

- அறிவுக்கடல்