districts

img

திருப்பூண்டி மேற்கு ஊராட்சி அரசுப் பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கு நாகைமாலி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

நாகப்பட்டினம், ஆக.31 - நாகப்பட்டினம் மாவட் டம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் அரசு உயர் நிலைப் பள்ளி (திருப்பூண்டி வடக்கு) செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் 320 மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இப்பள்ளி தொ டர்ந்து ஆண்டு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இப்பள் ளியில் பயின்ற மாணவர் ஒருவர், அண்மையில் நடந்த  செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறப்பான சாதனைகளை படைத்து வரும் இந்த அரசு  பள்ளிக்கு கூடுதல் கட்டிடங் கள் தேவைப்பட்டன. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி யிலிருந்து ரூ.27 லட்சம் மதிப் பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி நாட்டினார். இந்நிகழ் வில் ஒன்றிய பெருந்தலை வர் செல்வராணி ஞானசே கரன், ஊராட்சி மன்ற தலை வர் ராதிகா சத்யராஜ், பள்ளி  தலைமையாசிரியர் ஆறு. துரைக்கண்ணன், சிபிஎம் கீழையூர் கிழக்கு ஒன்றிய  செயலாளர் எம்.அப்துல் அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.