நாகப்பட்டினம், செப்.7 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலவழ கரை ஊராட்சி ஏர்வைகாடு கிரா மத்தில் சிறப்பு மக்கள் நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தோட்டக் கலை துறையின் மூலம் விவ சாயிகளுக்கு கன்றுகள், தார்ப் பாய்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட் கள் மானியத்துடன் வழங்கப்பட் டன. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் மற்றும் தாய்-சேய் நலன் காக்கும் சுகாதாரத் துறையின் மூலமாக வழங்கப்படும் பொருட் கள் ஆகியவை வழங்கப்பட்டன. திருக்கு வளை அருகில் இருக்கும் இந்த கிராமத்திற்கு நீண்ட காலமாக பேருந்து வசதி இல்லை. சட்ட மன்ற உறுப்பினரின் முயற்சியால் சமீபத்தில் அந்த கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சிறப்பு மக்கள் நேர்காணல் நிகழ்வு மூலம் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் குறை களை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்த னர். இந்நிகழ்வில் நாகை மாவட்ட ஆட்சியர் மரு.அருண்தம்புராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா இளம்பருதி, ஊராட்சி மன்ற தலைவர் தனபால் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.