districts

img

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், ஜூலை 25 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ வெண்மணி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வி.பி.நாகை மாலி எம்எல்ஏ துவக்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வெண் மணி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சட்டமன்ற உறுப்பி னர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நீண்ட காலமாக அப்பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. சட்டமன்ற தேர்தலின் போது  அப்பகுதியில் வசிக்கிற மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் போட்டியிட்ட, நாகைமாலி யிடம் கோரிக்கை வைத்து பேசினர். சட்ட மன்ற உறுப்பினரானவுடன் அப்பகுதி களுக்கு சென்று ஆய்வு நடத்தி, அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் குடிநீர் பற்றாக்குறை நீங்க மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு பரிந்துரை செய்தார்.  அதன்படி வெண்மணி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப் பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டி யில் இருந்து வழங்கப்படுகிற குடிநீர்,  கீழவெண்மணி மற்றும் மேலவெண் மணி கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக செயல் படும். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி விசையை அழுத்தி தொடங்கி வைத்தார்.  ஒன்றிய பெருந்தலைவர் வாசுகி நாக ராஜன், ஒன்றிய துணை பெருந்தலை வர் புருஷோத்தமதாஸ், வெண்மணி ஊராட்சி மன்ற தலைவர் மகாதேவன், ஒன்றிய குழு உறுப்பினர் கே.கே.கண்ணன் சிபிஎம் தெற்கு ஒன்றிய செய லாளர் ஆர்.முத்தையன். மாவட்ட குழு  உறுப்பினர் ஏ.சிவகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர்.