நாகப்பட்டினம், மே 19- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட சின்னதும்பூர் ஊராட்சியில் உள்ள ஆலமழை கிராமத்தில் பகுதிநேர அங்காடியை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சின்னதும்பூர் ஊராட்சியில் ஆல மழை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துடன் இணைந்த தலையாமழை தாய் நியாயவிலைக் கடையிலிருந்து ஆலமழை கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. இந்த பகுதி நேர அங்காடியின் மூலம் 164 குடும்பங்கள் பயன்பெறும். இந்நிகழ்வில் வேளாங்கண்ணி பேரூ ராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கூட்டுறவு சங்கங்களின் பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் ஆர்.கனகசபாபதி, செயலாளர் எஸ்.வி.செல்வகுமார், சின்ன தும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாமுரு கானந்தம், பாலக்குறிச்சி கூட்டுறவு சங்கத் தலைவர் பாலை செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் பொது விநியோக திட்ட முது நிலை ஆய்வாளர் சே.பாலநாகு, ஒன்றியக் குழு உறுப்பினர் சரண்யா பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.