நாகப்பட்டினம். பிப்.4 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் இயங்கும் அங்காடியை மாவட்ட ஆட்சியடன் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி ஆய்வு செய்தார். கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட தலைஞாயிறு பேரூராட்சி யில் உள்ள பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கா டியை மாவட்ட ஆட்சியர் மரு. அருண் தம்புராஜூன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான வீ.பி.நாகைமாலி அங்கு வழங்கப்படுகிற பொருட்களை ஆய்வு செய்தார். ரேசன் கடைகளில் வழங்கப்படுகிற அரிசி சுத்தமானதாகவும், மக்கள் வாங்கி அதை பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கின் றதா எனவும் ஆய்வு நடத்தினார். பொது விநி யோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அங்காடி யின் அருகில் இருக்கிற நேரடி நெல் கொள்மு தல் நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு திரண்டிருந்த விவசாயிகள் சட்ட மன்ற உறுப்பினரிடம் நேரடி நெல் கொள்மு தல் நிலையத்தில் நெல் மூட்டைகள் போடுவதில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறினர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்ப டும் என உறுதியளித்தார்.