districts

img

தோழர் ஏ.வி.முருகையன் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

நாகப்பட்டினம், ஆக.4 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட  செயலாளர் ஏ.வி.முருகையனின் இரண்டாம்  ஆண்டு நினைவஞ்சலி கீழையூர் ஒன்றி யம் வெண்மனைச்சேரி கிராமத்தில் நடை பெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றி யம் வெண்மனைச்சேரி கிராமத்தில் பிறந்த வர் ஏ.வி.முருகையன். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்து பல காலம் உழைக் கும் மக்களுக்காக போராடியவர், ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், சிபிஎம் நாகை மாவட்டச் செய லாளர் என பல பொறுப்புகளை வகித்து திறம்பட பணியாற்றியவர். இவரின் இரண்டாம் ஆண்டு நினை வஞ்சலி அவர் பிறந்த ஊரான வெண்ம னைச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழையூர் மேற்கு ஒன்றிய  செயலாளர் டி.வெங்கட்ராமன் மற்றும்  மாவட்ட குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  புகழஞ்சலி செலுத்தினர். இதில் ஏ.வி.முரு கையனின் துணைவியார் ஏவிஎம்ஜெயம், மகன் ஏவிஎம் பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.