நாகப்பட்டினம், ஆக.3- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளுர் வட்டம் வடகரை கிராமத்திலி ருந்து புதிய வழித்தடத்தில் பேருந்து பயணத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தொடங்கிவைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வட கரை கிராமத்திலிருந்து கீழ்வேளூர் வழி யாக திருவாரூர் வரையும், கோகூர், ஆனைமங்கலம் வழியாக நாகப்பட்டி னம் வரையும் புதிய வழித்தடத்தில் பேருந்து பயணத்தை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கொடியசைத்து துவக்கி வைத்தார். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு செல்லும் பெண்களுக்கு இலவச பயண வசதியையும், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு பயன்படும் வகையிலும் இப்பேருந்து பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள் ளது. இப்பேருந்து பல கிராமங்களை ஒன்றிணைப்பதால் தினசரி நக ரத்திற்கு செல்லும் மக்களுக்கு மிகப் பெரும் உதவியாக அமையும். விழாவில், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், ஆதி திராவிட நலத்துறை தலைவர் உ.மதி வாணன், கீழ்வேளூர் ஒன்றிய பெருந் தலைவர் வாசுகி நாகராஜன், வட கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பாண்டியன் மற்றும் அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.