districts

img

மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை – அமைச்சர் உறுதி

மே.பாளையம், ஜூன் 12- மேட்டுப்பாளையம் அரசு பொது  மருத்துவமனையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியத்திடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரில் மனு அளித்தனர். 

சிபிஎம் மேட்டுப்பாளையம் தாலுகா  செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட தலை வர்கள் அமைச்சரிடம் அளித்த மனுவில்  தெரிவித்திருப்பதாவது, காரமடை வட் டம்,  மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி  மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள  ஏழைஎளிய மக்கள் மேட்டுப்பாளையம்  அரசு பொது மருத்துவமனையை நம்பி யுள்ளனர். இம்மருத்துவமனையில், பல் வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பற் றாக்குறையாக இருந்து வருகிறது. இதனை உடனடியாக சரி செய்திட  வேண்டும். குறிப்பாக மருத்துவமனை யில் பிரசவம் அதிக அளவில் நடைபெறு வதால் மகப்பேறு மருத்துவர்கள் பற் றாக்குறையை சரி செய்திட வேண்டும். மேலும், சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள்  இருந்தும் இதனை இயக்கும் நிபுணர் கள் இல்லாததால் பயனற்று உள்ளது.  மலைப்பிரதேசமான உதக மண்டலத் தில், விபத்து ஏற்படுகையில், எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை கோவை அரசு  மருத்துவமனைக்கே கொண்டு செல்ல  வேண்டியுள்ளது. எனவே, மேட்டுப்பா ளையம் மருத்துவமனையில் எலும்பு  முறிவு சிறப்பு மையம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். 

முன்னதாக மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணி யம், மருத்துவமனையில் நடைபெற்ற விழா மேடையிலேயே, சிபிஎம் அளித்த  கோரிக்கை அனைத்தும் நியாமான கோரிக்கைகள் இதன் மீது உரிய கவ னம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள்  உடனிருந்தனர்.