மேட்டுப்பாளையம், ஆக.13- மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார பகுதியான கல்லார் பசுமை காடுகள் மற்றும் பில்லூர் அணை சுற்றியுள்ள பகுதிகளில் பல அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் பல வண்ணங்க ளில் சுற்றி வருகின்றன. இவைகள் கூட் டம்கூட்டமாக இடம் மாறுவதை காணும் அழகு கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது.
இயற்கையை அதன் தன்மை மாறா மல் பாதுகாப்பதில் வண்ணத்துப்பூச்சி களின் பங்கு இன்றியமையாதது. மலைக்காடுகளிலும் அடர்ந்த வனங் களிலும் மட்டுமின்றி அனைத்து பகுதி களிலும் அரியவகை தாவரங்கள் மற் றும் மலர்களின் பரவலுக்கு வண்ணத் துப்பூச்சியின் மகரந்த சேர்க்கையே முக் கிய காரணம். ஒரு பகுதியில் வண்ணத் துப்பூச்சிகள் வட்டமிட்டால் அப்பகுதி யில் இன்னமும் இயற்கை சூழல் மாசு படாமல் உள்ளது என்பதை ஒரு குறி யீடாக கொள்ளலாம். இந்த சின்னஞ் சிறிய வண்ணத்துப்பூச்சிகள் நிலத்தில் வாழும் மிகப்பெரும் உயிரினமான காட்டு யானை கூட்டங்களை போல ஆண்டுக்கு இருமுறை பருவ சூழலுக்கு ஏற்றார் போல் இடப்பெயர்ச்சி செய்யும் இயல்புடையது.
தென்மேற்கு பருவமழையின் துவக்க காலத்தில், மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து லட்சக்கணக் கில் பறக்க துவங்கும். இவை கிழக்கு தொடர்ச்சி மலைக்காடுகளை சென்ற டையும். இதே போல் இனவிருத்திக்கு பின்னர், அங்கிருந்து வடகிழக்கு பருவ மழையின் துவக்க காலத்தில் மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்டமாக கிழக்கு தொடர்ச்சி மலைக்காட்டில் இருந்து மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும். இந்த இடப்பெயர்ச்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறாமல் தொடரும் ஒரு இயற்கை சார்ந்த தொடர் நிகழ்வு.
இதனடிப்படையில் தற்போது பட்டாம் பூச்சிகளின் வலசை துவங்கியுள்ளது. கோவை மாவட் டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார பகுதியான கல்லார் பசுமை காடுகள் மற்றும் பில்லூர் அணை சுற்றியுள்ள ஈரப்பதம் அதிகமுள்ள இடங் களில் பல அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் பல்வேறு வண்ணங்களில் சுற்றி வருகின்றன. இதில். புல் மஞ்சள் என்றழைக்கப்படும் சின்னஞ்சிறு மஞ் சள் வண்ணத்துப்பூச்சிகள் தற்போது அதிகம் காணப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மழைப் பொழிவு அதிகம் உள்ளதால் வண்ணத் துப்பூச்சிகளின் எண்ணிக்கையும் வகை களும் அதிகரிக்கும் என வண்ணத்துப் பூச்சி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.