மன்னார்குடி, பிப்.20 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மன்னார்குடி ஒன்றியம் சார்பில் அரசு அதிகாரி களிடம் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. லெட்சுமாங்குடியில் பாதியில் நிறுத்தப்ப டும் பேருந்துகளால் பள்ளி மாணவர்கள் உட்பட தினசரி வேலைக்கு செல்லும் எல்லா மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்ற னர். எனவே முன்பு இயங்கியதை போல மன்னார்குடி முதல் சேந்தங்குடி வரை வாரத்தில் ஏழு நாட்களும் தொடர்ந்து அரசு பேருந்தினை இயக்கக் கோரி மனு கொடுக்கப்பட்டது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு தலைமை வகித்தார். மன்னார்குடி ஒன்றியத் தலைவர் எம்.இளமா றன், ஒன்றியச் செயலாளர் எம்.டி.கேசவ ராஜ், ஒன்றியப் பொருளாளர் ஆர்.ராஜ சேகரன் மற்றும் மன்னார்குடி வாலிபர் சங்க முன்னணி ஊழியர் சுப்பிரமணியன் ஆகியோர் அரசு போக்குவரத்து மன்னார்குடி பணிமனை பொறுப்பு கிளை மேலாளர் கண்ணனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கண்ணன் கூறி னார்.