விருதுநகர், செப்.5- விலைவாசி உயர்வு மற்றும் உழைப்புக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து ஊழி யர்களுக்கும் பயணப்படி, மருத்துவ உபகரண பரா மரிப்பு வழங்க வேண்டும். மாத ஊதியத்தை 5-ஆம் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மலைப் பகுதியில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு சிறப்பு பய ணப்படி வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியத்தை போன சாக வழங்க வேண்டும் என மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணிபுரியும் ஊழி யர்கள் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் ரோஜா ரமணி, பொரு ளாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட கன்வீனர் எம்.சாராள் துவக்கி வைத்துப் பேசினார். பஞ்சாலைத் தொழிலா ளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ராமர் ஆகியோர் விளக் கிப் பேசினர். சிஐடியு மாவட் டச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றி னார். இதில் ஏராளமான ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.