districts

img

பொது விநியோகத்திட்ட பொருட்களை கடத்துவோர் மீது குண்டர் ்சட்டம்

அருமனை, செப்.12- தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் கோரிக்கையினை ஏற்று மீனச்சல் பகுதியில் சதுப்பு நிலமாக மாறிய பகுதிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட மீனச்சல் ஏலாபகுதியில் அதிகமான நிலம் தண்ணீர் தேங்கி 150 ஏக்கர் அளவுக்கு சதுப்புநிலமாகி உள்ளன. கடந்த 15.ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிம் செய்ய முடியாமல் வருவாய் இல்லாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்  டி.வின்சென்ட் மற்றும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட தோட்டக்கலை இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்டிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மீனச்சல் பகுதியில் ஐந்து குளங்களையும் நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.