வகாடோஉகௌக (Ouagadougou),அக்.5- புர்கினோ பாசோவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 24 அன்று பர்சலோகோ என்ற நகரில் நடத்திய கொலை வெறித் தாக்குத லில் சில மணி நேரத்தில் 600 மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா அவை சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தனது அறி க்கையில் குறிப்பிட்டது. பயங்கர வாத குழுத்தரப்பில் இருந்து வந்த அறிக்கையில் 300 என குறிப்பிடப் பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உள வுத்துறை 600 பேர் படுகொலை செய் யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. புர்கினோ பாசோ, மாலி உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுக ளில் அல் கொய்தா பயங்கரவாதிக ளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் துவங்கி மத்திய கிழக்கு வரை அல்-கொய்தா மட்டு மின்றி ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங் கரவாத அமைப்புகளின் தாக்குதல்க ளால் ஒவ்வொரு நாட்டின் அமை தியையும் குலைத்து வருகிறது. இத்தகைய பயங்கரவாத அமை ப்புகள் எண்ணெய் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு களை சுரண்டுவதற்காக பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறையால் நிதி உதவி செய்து வளர்க்கப்பட்டன. இந்த அமைப்புகளை காரணம் காட்டி பிரான்ஸ், அமெரிக்க நாடுகள் தங்களுடைய ராணுவத்தின் மூலம் உங்களை பாதுகாக்கிறோம் என ராணுவ தளங்களை அமைத்து அதன் மூலம் அந்நாடுகளின் எண்ணெய், யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களை கடந்த பல ஆண்டுகளாக கொள்ளையடித்தன. மேலும் அந்நாடுகளில் தங்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்திக்கொண்டன. இந்நிலையில் புர்கினோ பாசோ, மாலி, நைஜர் உள்ளிட்ட சில நாடு களில் மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. புர்கி னோ பாசோவில் கேப்டன் இப்ரா ஹிம் தரோர் தலைமையில் நடந்து வரும் ராணுவ ஆட்சி அந்நாட்டில் இருந்த பிரான்ஸ் ராணுவத்தை வெளியேற்றி விட்டது. மேலும் பிரான்ஸ் நிறுவனங்களுக்கும், சர்வ தேச அளவில் தொழில் துறை உற் பத்திக்கு மிக முக்கிய தேவையான யுரேனிய ஏற்றுமதிக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு புர்கினோ பாசோவில் அல்-கொய்தா வின் பயங்கரவாதத்தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த 9 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் மக்களையும் ராணுவத்தின ரையும் அவர்கள் படுகொலை செய்துள்ளனர். 20 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 3,800 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் உலக ளவில் நடக்கும் ஆயுத மோதல் இடம் மற்றும் நிகழ்வு தரவுகள் கொடுக்கும் அமைப்பின் (ACLED) ஆய்வில் தெரியவந்துள்ளது.