districts

விருதுநகர் சந்தை மீண்டும் உச்சத்தைத் தொட்ட காபி வகைகளின் விலை

 விருதுநகர், ஜன.12- விருதுநகர் சந்தையில் காபி வகைகளின்  விலை வரலாறு காணாத வகையில் மீண்டும்  உயர்த்தப்பட்டுள்ளது. கடலை எண்ணெய், மல்லி, உருட்டு உளுந்து, பாசிப் பருப்பு  ஆகியவற்றின் விலை குறைந்து காணப்பட் டது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த  வாரம் ரூ.2,600 ஆக இருந்தது. இந்த வாரம்  டின் ஒன்றுக்கு ரூ.50 குறைந்துள்ளது. எனவே, ரூ.2,550க்கு விற்பனை செய்யப்படு கிறது. பாமாயில் 15 கிலோ ரூ.2,180 என விற்ற  நிலையில் ரூ.5 மட்டும் குறைந்து டின் ஒன்று  ரூ.2,175க்கு விற்பனையாகிறது. மல்லி நாடு வகை 40 கிலோ ரூ.3,900  முதல் ரூ.4500 வரை விற்பனை செய்யப்பட்  டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300  குறைந்துள்ளது. எனவே, ரூ.3,600 முதல் ரூ.4,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு  வகை ரூ.11,500 என விற்பனை செய்த நிலை யில், இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.200 வரை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.11,300க்கு விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ ரூ.9,650 முதல்  ரூ.9,850 வரை விற்கப்பட்டது. இந்த வாரம்  மூட்டைக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே,  ரூ.9,550 முதல் ரூ.9,750 வரை விற்பனையா கிறது. உச்சத்தில் காபி விலை காபி வகைகளின் விலை திடீரென வர லாறு காணாத வகையில் கடந்த ஜனவரி மாதம்  உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தீக்க திர் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களில் செய்தி கள் வெளியானது. பின்பு, அடுத்து வாரமே  விலை உயர்வு அனைத்தும் ரத்து செய்யப் பட்டது. இந்த நிலையில் மீண்டும் வரலாறு காணாத அளவிற்கு காபி வகைகளின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, தனியார் மற்றும் ஆவின் பால் வகைகளின் விலையும் திடீரென உய ர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது, காபி வகைகளின் விலையும் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தேநீர் மற்றும் காபி கடை உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ஏற்கனவே, ஒரு குவளை தேநீரின் விலை குறைந்தபட்சம் ரூ.13 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது. சிறிய கடைகளில் கூட ஒரு குவளை காபி விலை ரூ.15 முதல்  ரூ.20 வரை விற்கப்படுகிறது. தற்போது இந்த  விலை உயர்வின் காரணமாக, ஒரு குவளை  காபியின் விலை கடுமையாக உயர்த்தப் படும். அவ்வாறு செய்தால், தேநீர் கடைக்கு  வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து, வியாபாரம் பெருமளவு பாதிக்கப்படும் என்ற  கவலையில் வியாபாரிகள்  ஆழ்ந்துள்ளனர்.   காபி விலைகளின் விபரம் வருமாறு: காபி பிளாண்டேசன் “பிபி வகை” 50  கிலோ கடந்த வாரம் ரூ.24,100க்கு விற்கப்பட்  டது. ரூ. 13,450 ஆயிரம் வரை உயர்த்தப் பட்டுள்ளது. எனவே தற்போது ரூ.37,500க்கு விற்கப்படுகிறது, இதேபோல் “ஏ வகை” காபி பிளாண்டே சன் விலை  ரூ.24,750 என இருந்தது. தற்போது  தற்போது ரூ.14,250 வரை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.39,000க்கு விற்கப்படுகிறது. “சி வகை”காபி  பிளாண்டேசன் ரூ.23, 100க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.11.900 வரை  உயர்த்தப்பட்டு தற்போது ரூ.35 ஆயி ரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், “ரோபஸ்டா பிபி“ வகை காபி   50 கிலோ கடந்த வாரம் வரை ரூ.21 ஆயி ரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் திடீ ரென ரூ.6500ஆயிரம் உயர்ந்து தற்போது ரூ. 27,500 என விற்கப்படுகிறது. இதேபோல் “பிளாக் பிரவுன்“ வகை காபி 50 கிலோ கடந்த வாரம் ரூ.21 ஆயிரம்  என விற்ற நிலையில், தற்போது ரூ.4,000 உயர்ந்து ரூ.25,000க்கு விற்பனை செய்யப்படு கிறது. காபி வகைகளின் விலை தாருமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, ஒன்றிய,  மாநில அரசுகள் உடனடியாக இந்த விலை  உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். தனியார் வியாபாரிகள் திடீரென காபி வகை களின் விலையை பல மடங்கு உயர்த்தியை ஏற்றுக் கொள்ளாமல்   அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை கடுமையாக அமல்  படுத்த வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.